×

காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி இரும்புக் கரம் கொண்டு சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் சட்டத்தை காக்கக்கூடிய காவலர்களின் கையைவிட, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரின் கைகளே ஓங்கி இருக்கின்றன என்பது பல்வேறு கொடும் சம்பவங்கள் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

உதாரணமாக, ஒரே இரவில் 6 பேர் வெட்டிக்கொலை, மது போதையில் மோதல், மண்டை உடைப்பு, வண்ணாரப்பேட்டையில் துணி கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு, ரூட் தல பிரச்சனையில் மாணவனுக்கு வெட்டு, கொடுங்கையூர், வியாசர்பாடி பகுதியில் ஒரே இரவில் 5 இடங்களில் வழிப்பறி, பிறந்தநாள் விழாவில் பட்டாக் கத்தியுடன் வாலிபர் நடனம் என்று பல்வேறு குற்ற நிகழ்வுகள் நடைபெற்றதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வந்துள்ளன. தமிழ்நாடு காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி இரும்புக் கரம் கொண்டு சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 

The post காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Chennai ,Tamil Nadu ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,
× RELATED தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்...