சென்னை: நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான விடைக்குறிப்பை (கீ-ஆன்சர்) தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதியர்வர்கள் அதை பதிவிறக்கம் செய்து கொள்வதுடன், இதுகுறித்து சந்தேகம் இருந்தால் இன்று தெரிவிக்கலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் நாடு முழுவதும் உள்ள 1 லட்சம் இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான தேசிய அளவிலான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 5ம் தேதி நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 571 நகரங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் 24 லட்சம் மாணவ மாணவியர் பங்கேற்றனர். இதையடுத்து, அந்த நீட் தேர்வில் விடைக்குறிப்பை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது.
தேர்வு எழுதிய மாணவ மாணவியர் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை தேசிய தேர்வுமுகமையின் இணைய தளத்தில் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அதில் தாங்கள் எழுதியுள்ள விடைகளில் மாற்றம் இருந்தால் அது குறித்து தங்கள் ஆட்சேபணையை இன்று இரவு 11.50 மணி வரை தெரிவிக்கலாம். அதற்காக ஒரு கேள்விக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
The post நீட் தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு appeared first on Dinakaran.