×

மிசோரமில் கனமழை, பாறை சரிவு: பலி எண்ணிக்கை 28ஆக உயர்வு

அய்ஸ்வால்: மிசோமிம் மாநிலம் அய்ஸ்வாலில் கனமழையால் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் கிழக்கு பகுதிகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய ரெமல் புயல் மேற்குவங்கம், வங்கதேச நாடுகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை கரையை கடந்தது.

தொடர் கனமழை காரணமாக மிசோரம் மாநிலம் அய்ஸ்வால் மாவட்டத்தின் பல இடங்களில் கல்குவாரிகளில் பாறைகள் சரிந்து விழுந்தது. இந்த விபத்துகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஜார்க்கண்ட், அசாம் மாநிலங்களை சேர்ந்த 3 சிறுவர்கள் மற்றும் பிற இடங்களை சேர்ந்த 7 பேரும் அடங்குவர். மேலும் 6 மாத குழந்தை உள்பட 6 பேர் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.

The post மிசோரமில் கனமழை, பாறை சரிவு: பலி எண்ணிக்கை 28ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Aizwal ,Aizwal, Missourim ,Storm Remal ,West ,Mizoram ,
× RELATED மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை...