×

குமரி முழுவதும் பரவலாக சாரல் மழை: மேலும் 6 வீடுகள் இடிந்து விழுந்தன

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்து வரும் நிலையில் மேலும் 6 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. நேற்றும் பகல் வேளையில் விட்டுவிட்டு மழை பெய்தவண்ணம் இருந்தது. இரவிலும் மழைநீடித்தது. இன்று காலை வரை விடிய விடிய சாரல் மழை பெய்தவண்ணம் இருந்தது.மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45.44 அடியாகும். அணைக்கு 589 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 535 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

பெருஞ்சாணி நீர்மட்டம் 60.3 அடியாகும். அணைக்கு 434 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-1ல் 15.84 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 91 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-2ல் 15.94 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 136 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. பொய்கையில் 16.2 அடியாக நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையில் 31.17 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 4 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சிற்றார்-1 அணையில் இருந்து மறுகால் திறக்க வாய்ப்பு உள்ளது.

தென் தமிழக கடல் பகுதியில் குளச்சல் முதல் கீழக்கரை வரையிலான பகுதிகளில் இன்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், சில வேளையில் 55 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேலும் 6 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

The post குமரி முழுவதும் பரவலாக சாரல் மழை: மேலும் 6 வீடுகள் இடிந்து விழுந்தன appeared first on Dinakaran.

Tags : Saran ,Kumari ,Nagarko ,Kumari district ,Dinakaran ,
× RELATED போதையில் வாகனம் ஓட்டிய 47 பேர் மீது வழக்கு தலா ₹10 ஆயிரம் அபராதம்