×

ஜம்மு – பூஞ்ச் நெடுஞ்சாலையில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பயணிகள் பலி

ஜம்மு: ஜம்மு – பூஞ்ச் நெடுஞ்சாலையில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச எண் கொண்ட பேருந்து ஜம்முவில் இருந்து ஷிவ்கோடிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அக்னூர் அருகே உள்ள ஒரு குறுகிய வளைவில் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 21 பயணிகளின் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பயணிகள் அனைவரும் ஹத்ராஸைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அக்னூர் உபசிலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்த பயணிகள் ஜம்மு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 25 பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

பேருந்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. ஏற்கனவே ஜம்மு-கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்னாப் ஆற்றின் ஆழமான பள்ளத்தாக்கில் நேற்று பேருந்து விழுந்ததில் குறைந்தது 38 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஜம்மு – பூஞ்ச் நெடுஞ்சாலையில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பயணிகள் பலி appeared first on Dinakaran.

Tags : Jammu-Poonch highway ,JAMMU ,Hadhras, Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED 121 பேர் பலியான ஹத்ராஸ் கூட்ட...