×

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஓராண்டுக்கு விளையாடப் போகும் போட்டிகள்: பட்டியல் வெளியீடு

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஓராண்டுக்கு விளையாடப் போகும் கிரிக்கெட் தொடர்கள் என்னென்ன என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி ஜூன் மாதத்தில் துவங்கி, 2025 ஐபிஎல் தொடருக்கு முன்பு வரை எந்தெந்த அணிகளுடன் கிரிக்கெட் தொடர்களில் மோதப் போகிறது என்பது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. ஜூன் 5ஆம் தேதி முதல் இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளது. அதற்கு அடுத்து ஜூலை மாதம் ஜிம்பாப்வே அணியுடன் 5 டி20 போட்டிகளில் மோத உள்ளது. பின்னர் ஜூலை கடைசி வாரம் மற்றும் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இலங்கை அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

அடுத்து செப்டம்பர் மாதத்தில் வங்கதேச அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் மோத உள்ளது. இதைத்தொடர்ந்து அக்டோபரில் நியூசிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மோத உள்ளது. நவம்பர் கடைசி வாரம் முதல் ஜனவரி 2வது வாரம் வரை ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட முக்கியமான தொடரில் பங்கேற்க உள்ளது. அதன் பின் ஜனவரி இறுதி மற்றும் பிப்ரவரி துவக்கத்தில் இங்கிலாந்து அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் மோத உள்ளது. அடுத்து மார்ச் மாதத்தில் 2025 சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்த கிரிக்கெட் தொடர்கள் எல்லாம் விளையாடி முடிக்கும்போது, 2025 ஐபிஎல் தொடர் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஓராண்டுக்கு விளையாடப் போகும் போட்டிகள்: பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : cricket ,Mumbai ,Indian cricket team ,Indian ,IPL ,2025 IPL ,Dinakaran ,
× RELATED இன்று மாலை நடைபெறவிருந்த இந்திய...