×
Saravana Stores

பழநி அருகே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் பெண் போலீசார் சீருடையுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

பழநி: பழநி அருகே ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில், பெண் போலீசார் சீருடையுடன் இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே பெரியகலையம்புத்தூரில் ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 21ம் தேதி முகூர்த்தக்கால் நடுதல் மற்றும் அம்மனுக்கு காப்புக் கட்டும் நிகழ்வு நடந்தது. நேற்று பூக்குழி இறங்கும் விழா நடந்தது. குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

இந்நிலையில் பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த பழநி சரகத்தைச் சேர்ந்த 7 பெண் போலீசாரும் பக்தி மிகுதியில் சீருடையுடன் பூக்குழி இறங்கினர். பெண் போலீசார் ஆர்வமுடன் பூக்குழி இறங்குவதைக் கண்ட பக்தர்கள் குலவையிட்டு வரவேற்பு செய்தனர். இதனை வீடியோ எடுத்த சிலர் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

The post பழநி அருகே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் பெண் போலீசார் சீருடையுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Tags : Bhadrakaliamman Temple Festival ,Palani ,Icourt Bhadrakaliamman Temple Festival ,Peryakalayambutur ,Dindigul district ,
× RELATED பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு..!!