×

செங்கல்பட்டில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் பூட்டை உடைத்து கொள்ளை

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியில் உள்ள அடகு கடையின் பூட்டை உடைத்து 700 கிராம் வெள்ளி பொருட்களை திடுடி சென்றுள்ளனர். செங்கல்பட்டு அடுத்த பாலூரில் உள்ள மெடிக்கல் கடையின் பூட்டை உடைத்து 3000 ரூபாய் பணம், பாலூரில் உள்ள பேக்கரி கடையின் பூட்டை உடைத்து 2000 ரூபாய் பணம், பாலூரில் மளிகை கடையின் பூட்டை உடைத்து 4000 ரூபாய் பணம் மற்றும் 11000 மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது

நான்கு பேர் கொண்ட மர்ம நபர்கள் முகமூடி அணிந்தபடி பட்டா கத்தியுடன் அடுத்தடுத்து நான்கு இடங்களில் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்து கொள்ளை சம்பவம் அறங்கேறியது சிசிடிவி கேமராவில் பதிவானதை கைபற்றி பாலூர் மற்றும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்ட வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்தும், மூன்று இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

The post செங்கல்பட்டில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் பூட்டை உடைத்து கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Chengalpat ,Chengalpattu ,Williampakkam ,Balaur ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு..!!