×

செங்கல்பட்டு அருகே விபத்து: கணவன் மனைவி இருவர் உயிரிப்பு

செங்கல்பட்டு அடுத்த பாலூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த தம்பதி கங்காரதன் (58) இவரது மனைவி அமுலு (53). இருவரும் பாலூரில் இருந்து செங்கல்பட்டிற்க்கு தங்களின் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது செங்கல்பட்டு அருகே திம்மாவரம் பகுதியில் லாரி இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கங்காதரம் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த அமுலுவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் அமுலு உயிரிழந்தார். உயிரிழந்த கணவன் மனைவி இருவரின் உடல்களையும் உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டு விபத்து ஏற்படுத்திய லாரியை காவல் நிலையம் எடுத்து சென்று லாரி ஓட்டுநரை கைது செய்து விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு அருகே நடைபெற்ற விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post செங்கல்பட்டு அருகே விபத்து: கணவன் மனைவி இருவர் உயிரிப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Gangaratan ,Ambedkar Nagar ,Palur ,Amulu ,Dimmawaram ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலத்தில்...