×

திருப்பூரில் குட்டையில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் பலி

திருப்பூர்: திருப்பூரில் குட்டையில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பண்ணைக்கிணறு பகுதியை சேர்ந்த 6ம் வகுப்பு பயிலும் மிதுன் ராஜ்(11), 7ம்‌வகுப்பு பயிலும் வினோத்(12) என்ற சிறுவர்கள் நேற்று விளையாட சென்ற நிலையில் வீடு திரும்பாததால் குடிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து தேடி வந்தனர்.

இந்நிலையில் விளையாட சென்ற சிறுவர்கள் அருகில் உள்ள குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. குட்டையில் மிதந்த சிறுவர்கள் உடலை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருப்பூரில் குட்டையில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Mithun Raj ,Vinod ,Udumalai ,Farmakinaru ,Tirupur district ,
× RELATED திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து