×

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பச்சை ரோஜா மலர்கள்

ஊட்டி: குன்னூரில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. நீலகிரி மாவட்டம் குன்னூரில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிம்ஸ் பூங்கா உள்ளது. குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா 1874ம் ஆண்டு தொடங்க பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த பூங்கா கடல் மட்டத்திலிருந்து 1790 மீட்டர் உயரத்தில் உள்ளது. 12 ஹெக்டர் பரப்பளவில் சரிவு மற்றும் மேடான நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

இதமான காலநிலை நிலவும் இப்பூங்காவை சுற்றுலா பயணிகள் அதிகளவு பார்த்து ரசிக்கின்றனர். இப்பூங்காவில் காகித மரம், பென்சில் மரம், யானைக்கால் மரம், டர்பன்டைன் மரம் என வெளிநாடுகளில் மட்டுமே காணப்படும் பல அரிய வகை மரங்களும், இமயமலை, நேபாளம் போன்ற பகுதிகளில் மட்டுமே போன்ற பகுதிகளில் மட்டுமே காணப்படும் ருத்ராட்சம் மரம் இந்த பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சுமார் 300 தாவரவியல் குடும்பங்களை சார்ந்த 1200 சிற்றின தாவர வகைகளும் இப்பூங்காவில் உள்ளன. ஆண்டுதோறும் கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக நடைபெறும் பழக்கண்காட்சி பிரசித்தி பெற்றதாகும். நடப்பு ஆண்டு பழக்கண்காட்சி கடந்த வாரம் நடைபெற்று முடிந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்த வண்ணம் உள்ளனர். இதனிடையே இதுதவிர அரிய வகை பச்சை ரோஜா நாற்றுகள் வளர்க்கப்பட்டு பூங்காவின் பல்வேறு இடங்களிலும் நடவு செய்யப்பட்டுள்ளன. இவை தற்போது பூத்துக்குலுங்கும் நிலையில் சுற்றுலா பயணிகள் இவற்றை பார்வையிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

The post குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பச்சை ரோஜா மலர்கள் appeared first on Dinakaran.

Tags : Gunnar Sims Park ,SIMS PARK ,KUNNUR ,Horticulture Department ,Nilgiri district, Kunnur ,Dinakaran ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2வது...