×

மக்கள் பணி செய்ய முடியாததால் மன உளைச்சல் ஒன்றிய கவுன்சிலர் தூக்கிட்டு தற்கொலை: எம்எல்ஏ உட்பட அரசியல் கட்சியினர் அஞ்சலி

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் 9வது வார்டு கவுன்சிலராக வேங்கடமங்கலம் ஊராட்சி ரத்தினமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஏ.விஜயகுமார் (64), திமுக சார்பில் போட்டியிட்டு 2வது முறையாக அமோகமாக வெற்றி பெற்றார்.  கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால், அவரது வலது கை மற்றும் கால் இயங்கவில்லை. இதையொட்டி, அரசு மற்றும் அரசியல் கட்சி கூட்டங்களில் பங்கேற்க முடியாமலும், மக்கள் பணிகளை சரிவர செய்ய முடியாமலும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இதையடுத்து, பிசியோதெரப்பி டாக்டரின் ஆலோசனைபடி வீட்டில் உடற்பயிற்சி செய்து வந்தார். இந்தவேளையில், பெண்களுக்கான வன்கொடுமை குறித்து காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று காலை ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற இருந்தது. இதில், கலந்து கொள்ளும்படி விஜயகுமாருக்கு நேற்று முன்தினம் இரவு அழைப்பு வந்தது. இந்நிலையில், அரசு மற்றும் அரசியல் கட்சி கூட்டங்களில் பங்கேற்க முடியாமலும், மக்கள் பணிகளை செய்ய முடியாமலும், வலது கை சரிவர செயல்படாததால் கையெழுத்து போட முடியாமலும் கடும் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று அதிகாலையில் உடற்பயிற்சி செய்யும் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். காலையில் குடும்பத்தினர் அவரை பார்க்க சென்றபோது, விஜயகுமார் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு விஜயகுமாரை பரிசோதனை செய்தபோது, விஜயகுமார் ஏற்கனவே இறந்தது தெரிந்தது.தகவலறிந்து தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மறைந்த ஒன்றிய கவுன்சிலரின் உடலுக்கு செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், ஒன்றியக்குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், துணை தலைவர் ஆராமுதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மக்கள் பணி செயல் முடியாமததால், மன உளைச்சலில் இருந்த ஒன்றிய கவுன்சிலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில், நேற்று நடக்க இருந்த சிறப்பு ஒன்றியக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது….

The post மக்கள் பணி செய்ய முடியாததால் மன உளைச்சல் ஒன்றிய கவுன்சிலர் தூக்கிட்டு தற்கொலை: எம்எல்ஏ உட்பட அரசியல் கட்சியினர் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Union ,MLA ,Kooduvancheri ,Chengalpattu District, Kattangolathur ,9th Ward ,Councillor ,Vengadamangalam Puradachi Ratnamangalam Village ,Vijayakumar ,Dinakaran ,
× RELATED கலெக்டராக தேர்வான தூத்துக்குடி...