×

காட்பாடியில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 8 சவரன் திருட்டு

 

வேலூர், மே 30: காட்பாடியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.காட்பாடி குமரப்பா நகரை சேர்ந்தவர் இளங்கோ(38), தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு கிளம்பி வெளியே சென்றுள்ளார். பின்னர் பகல் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீடு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைத்து அதில் இருந்த 8 சவரன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்றது ெதரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளங்கோ இதுகுறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர்.

தகவலறிந்த டிஎஸ்பி சரவணனும் சம்பவ இடம் வந்து பார்வையிட்டார். முதற்கட்ட விசாரணையில் வீட்டின் பக்கவாட்டு சுவற்றின் மீது ஏறி குதித்து மர்மநபர்கள் பூட்டு உடைத்து திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.இதேபோல் காட்பாடி அடுத்த வடுகன்குட்டை பகுதியை சேர்ந்தவர் கணபதி, ராணுவ வீரர். இவருக்கு சொந்தமாக காட்பாடியில் உள்ள மற்றொரு வீட்டிற்கு அவ்வப்போது சென்று தங்கிவிட்டு வருவது வழக்கம். இதேபோல் நேற்றுமுன்தினம் வடுகன்குட்டையில் உள்ள வீட்டை பூட்டிச்சென்ற அவர் நேற்று காலை மீண்டும் திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் எதுவும் திருடு போகவில்லையாம். இருப்பினும் அங்கிருந்த சிசிடிவி கேமராவை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தி அதில் இருந்த ஹார்ட் டிஸ்குகளை திருடிச்சென்றது தெரிந்தது. இதுதொடர்பாக காட்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

The post காட்பாடியில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 8 சவரன் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Kadpadi ,Vellore ,Gadpadi ,Ilango ,Kumarappa ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நகைக் கடையில் கொள்ளை முயற்சி..!!