×

டிரைவரின் லைசென்சைரத்து செய்ய நடவடிக்கை

 

சேலம், மே 30: ஏற்காடு மலைப்பாதையில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரின் லைசென்சை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடை விடுமுறையொட்டி ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி மாலை ஏற்காட்டில் இருந்து சேலம் புதிய பஸ் ஸ்டாண்ைட நோக்கி வந்த தனியார் 13வது கொண்டை ஊசி வளைவில் விபத்தில் சிக்கி 100 அடி பள்ளத்தை விழுந்து, 11வது கொண்டை ஊசி வளைவில் செங்குந்தாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுவன் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த விபத்தையடுத்து, ஏற்காடு அடிவாரம் போலீஸ் சோதனைச்சாவடியில் வாகனங்கள் சோதனை செய்து ஏற்காட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

The post டிரைவரின் லைசென்சைரத்து செய்ய நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Salem ,Yercaud ,pass ,Dinakaran ,
× RELATED நில அளவை செய்யவிடாமல் தடுப்பதாக மாற்றுத்திறனாளி புகார்