×

சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனத்திற்கு விருது

 

கிருஷ்ணகிரி, மே 30: பெண்களின் முன்னேற்றத்திற்கு, சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு சுதந்திர தின விருது வழங்கப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சரால் சுதந்திர தின விழாவின் போது விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதிற்கு கருத்துரு அனுப்புபவர், தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்கவேண்டும்.

குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மக்களுக்கு தொண்டாற்றும் வகையில், தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்றிருத்தல் வேண்டும். சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, வருகிற ஜூன் 20ம் தேதி கடைசி நாளாகும். இவ்விருதிற்கு தகுதியான சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணையதளம் வாயிலாக, வருகிற ஜூன் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனத்திற்கு விருது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,District ,Collector ,Sarayu ,Dinakaran ,
× RELATED தீக்குளிக்க முயன்ற தாய்- மகள் கைது