×

சிஐடியு ஓட்டுநர் சங்க பேரவை கூட்டம்

 

விருதுநகர், மே 30: சிஐடியூ டூரிஸ்ட் வேன், கார் டாட்டா ஏசி மற்றும் கனரக வாகனங்களின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டம் விஜய் தலைமையில் நடைபெற்றது. செல்வகுமார், ராஜா, செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் திருமலை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் விளக்கிப் பேசினார். மார்க்சிஸ்ட் நகரச் செயலாளர் முருகன், முரளி வாழ்த்துரை வழங்கினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் தேவா சிறப்புரை வழங்கினார். ஒன்றிய அரசானது, டோல் கேட் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்கத்தின் தலைவராக விஜய், செயலாளராக செல்வக்குமார், பொருளாளராக ராஜா, துணைத் தலைவராக ஜெயபிரகாஷ், துணைச் செயலாளராக செந்தில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

The post சிஐடியு ஓட்டுநர் சங்க பேரவை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : CITU Drivers ,Association ,Council ,Virudhunagar ,CITU Tourist Van ,Car Tata AC ,Heavy Vehicle Owners and Drivers Association ,Vijay ,Selvakumar ,Raja ,Selvam ,CITU Drivers Association Council ,Dinakaran ,
× RELATED நிலக்கோட்டையில் ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்