×

புகையிலை பொருள் பதுக்கிய குடோனுக்கு சீல் வைப்பு

அவிநாசி, மே 30: பெருமாநல்லூர் அருகே புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே கடந்த வாரம் கோவை, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் விபத்தில் சிக்கியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பார்த்த போது, இரு கார்களையும் ஓட்டி வந்தவர்கள் தப்பிச்சென்றனர். அதில் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்புடைய 7 பேரை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய பெருமாநல்லூரில் மளிகை கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோபராம் என்பவரது மளிகை கடை, அவிநாசி கைகாட்டி புதூரில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த டூராராம், மாதாராம் ஆகியோருக்கு சொந்தமான மளிகை கடை மற்றும் தங்கியிருந்த வீட்டிற்கும், பதுக்கி வைத்திருந்த குடோனுக்கும் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று சீல் வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

The post புகையிலை பொருள் பதுக்கிய குடோனுக்கு சீல் வைப்பு appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Perumanallur ,Coimbatore-Salem National Highway ,Tirupur district ,Dinakaran ,
× RELATED ஆம்னி பேருந்துகளில் பயணிகளை...