×

பயணிகள் ரயிலில் திடீர் தீ


கவுஷாம்பி: உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் இருந்து கான்பூர் நோக்கி பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. பார்வாரி ரயில்நிலையத்தை ரயில் நெருங்கிய நிலையில் திடீரென பயணிகள் பெட்டியில் தீப்பிடித்தது. இதனை பார்த்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். உடனடியாக ரயில்வே ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு ரயில் பெட்டியில் பற்றிய தீயை அணைத்தனர்.

தீப்பிடித்த பெட்டி மற்றும் அதற்கு அடுத்த பெட்டியில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர். தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட பின்னர் சுமார் 50 நிமிடங்களுக்கு பின் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த தீ விபத்தில் பயணிகள் யாரும் காயமடையவில்லை.

 

The post பயணிகள் ரயிலில் திடீர் தீ appeared first on Dinakaran.

Tags : Kaushambi ,Gorakhpur ,Uttar Pradesh ,Kanpur ,Parwari station ,Dinakaran ,
× RELATED வாக்குவாதம் செய்ததை தடுத்ததால் விமான...