×

நமீபியாவுடன் பயிற்சி ஆட்டம்; வார்னர் அதிரடியில் ஆஸி. அபார வெற்றி

போர்ட் ஆப் ஸ்பெயின்: நமீபியா அணியுடனான உலக கோப்பை டி20 பயிற்சி ஆட்டத்தி, ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. மெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகள், அதற்கு தயாராகும் வகையில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. 6வது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – நமீபியா அணிகள் நேற்று மோதின. போர்ட் ஆப் ஸ்பெயின், குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸி. முதலில் பந்துவீசியது. ஸி. வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நமீபியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 119 ரன் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ஜேன் கிரீன் 38 ரன் விளாசினார்.

ஆஸி. தரப்பில் ஆடம் ஸம்பா 3, ஜோஷ் ஹேசல்வுட் 2, நாதன் எல்லிஸ், டிம் டேவிட் தலா 1 விக்கெட் எடுத்தனர். டுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 10 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கேப்டன் மிட்செல் மார்ஷ் 18, ஜோஷ் இங்லிஸ் 5, டிம் டேவிட் 23 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். தொடக்க வீரர் டேவிட் வார்னர் 54* ரன் (21 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), மேத்யூ வேடு 12 ரன்னுடன் (5 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். நமீபியா தரப்பில் பெர்ணார்ட் ஷோல்ட்ஸ் 2 விக்கெட் எடுத்தார். ர்னர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸி. தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் நாளை அதிகாலை வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது.

ஆட்டம் ரத்து
வங்கதேசம் – அமெரிக்கா அணிகளிடையே டாலஸ் மைதானத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்த பயிற்சி ஆட்டம், அங்கு பெய்த கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. சமீபத்தில் இந்த 2 அணிகளுக்கு இடையே நடந்த டி 20 தொடரை அமெரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

The post நமீபியாவுடன் பயிற்சி ஆட்டம்; வார்னர் அதிரடியில் ஆஸி. அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Namibia ,Warner ,Aussie ,Port of Spain ,Australia ,World Cup T20 ,ICC ,Men ,T20 World Cup ,America ,West Indies ,Dinakaran ,
× RELATED குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி...