×

டிஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: இன்று தொடக்கம்

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்திய போட்டித் தேர்வில், தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் இன்று தொடங்கி 3 கட்டங்களாக ஜூன் 2ம் தேதி வரை நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ெதரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மற்றும் வட்டார வள மையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான 3192 காலிப் பணியிடங்களில் புதிய நபர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு, கடந்த பிப்ரவரி 4ம் தேதி நடந்தது. அதில் 40 ஆயிரத்து 136 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் மே 18 மற்றும் 22ம் தேதி வெளியிடப்பட்டன.

இதையடுத்து, கணக்குப் பாடத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 30 மற்றும் 31ம் தேதிகளில் சென்னை, சேத்துப்பட்டில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேனிலைப் பள்ளியிலும், தாவரவியலுக்கான சான்று சரிபார்ப்பு இன்று மட்டும் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியிலும், விலங்கியல் பாடத்துக்கு இன்று மட்டும் சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியிலும், புவியியல் பாடத்துக்கான சான்று சரிபார்ப்பு இன்று மட்டும் சென்னை சேத்துப்பட்டு, மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேனிலைப் பள்ளியிலும் நடக்கிறது.

தமிழ்ப் பாடத்துக்கான சான்று சரிபார்ப்பு மே 31, ஜூன் 1 மற்றும் 2ம் தேதிகளில் சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியிலும், இயற்பியல் பாடத்துக்கு மே 31 மற்றும் ஜூன் 1ம் தேதியில் சென்னை விருகம்பாக்கம் ஜெய்கோபால் கராேடியா அரசுப் பெண்கள் மேனிலைப் பள்ளியிலும், வேதியியல் பாடத்துக்கு ஜூன் 1மற்றும் 2ம் தேதியில் சென்னை சேத்துப்பட்டு மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேனிலைப் பள்ளியிலும், வரலாறு பாடத்துக்கு மே 31 மற்றும் ஜூன் 1,2ம் தேதியில் சேத்துப் பட்டு மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேனிலைப் பள்ளியிலும், கணக்குப் பாடம் (சிறுபான்மை) மே 31ம் தேதி மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேனிலைப் பள்ளியிலும் நடக்கிறது. ஆங்கிலப் பாடத்துக்கான சான்று சரிபார்ப்பு ஜூன் 1 மற்றும் 2ம் தேதியில் சென்னை கீழ்ப்பாக்கம் சிபிஐ பெயின் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளியிலும் நடக்கிறது.

 

The post டிஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Teachers Examination Board ,TRB ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...