×

கேரளாவில் மிக பலத்த மழை; வெள்ளத்தில் மிதக்கும் திருவனந்தபுரம், கொச்சி: 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று பெய்த பலத்த மழையால் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. திருவனந்தபுரத்தில் நேற்று 2 மணிநேரத்தில் 60 மி.மீட்டருக்கு மேல் மழை பெய்தது. கேரளாவில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக கோடை மழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கொச்சி, கோட்டயம், திருவனந்தபுரம், கொல்லம் உள்பட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கோட்டயத்தில் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ஏராளமான வீடுகளும், விவசாய நிலங்களும் சேதமடைந்தன.

இந்நிலையில் வரும் 4 நாட்களுக்கு கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை நீடிக்கும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவனந்தபுரம் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் உட்பட 7 மாவட்டங்களுக்கு நேற்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் நேற்று காலை முதல் மிக பலத்த மழை பெய்தது. இதனால் இரு நகரங்களும் வெள்ளத்தில் தத்தளித்தன. நூற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. எ்ல்லா சாலைகளிலும் ்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று 2 மணிநேரத்தில் 60 மி.மீட்டருக்கு மேல் மழை பெய்தது.

இதனால் ெபாதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இன்று திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் உட்பட 6 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் ஜூன் 2ம் தேதி வரை மிக பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு இருக்கும் என்பதால் கேரள கடல் பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவுநேர பயணத்திற்கு தடை
கேரளாவில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் மலையோர பகுதிகளுக்கு இரவில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு இந்த தடை நீடிக்கும் என்று இரு மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

The post கேரளாவில் மிக பலத்த மழை; வெள்ளத்தில் மிதக்கும் திருவனந்தபுரம், கொச்சி: 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Kochi ,
× RELATED நீட் தேர்வுக்கு எதிராக கேரளாவில் போராட்டம்..!!