×

ஆவேசம் பட பாணியில் காருக்குள் நீச்சல் குளம்; யூடியூபர் மீது வழக்கு: லைசென்ஸ் ரத்து


திருவனந்தபுரம்: பஹத் பாசில் நடித்து சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படம் ஆவேசம். இந்தப் படம் தமிழ்நாட்டிலும் சூப்பர் ஹிட்டாக ஓடியது. இந்தப் படத்தில் நாயகனான பஹத் பாசில் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஒரு வேனில் நீச்சல் குளம் அமைத்து அதில் குளிக்கும் ஒரு காட்சி உள்ளது. இந்தக் காட்சியை ரசிகர்கள் பெரிதும் ரசித்தனர். இந்நிலையில் கேரளாவின் ஆலப்புழா அருகே உள்ள அம்பலப்புழா பகுதியைச் சேர்ந்த சஞ்சு டெக்கி என்ற இந்த பிரபல யூடியூபர் தன்னுடைய காரின் பின் இருக்கையை நீக்கி அதில் ஒரு நீச்சல் குளத்தை ஏற்படுத்தினார்.

பின்னர் அதில் தண்ணீரை நிரப்பி நேற்று அம்பலப்புழா பகுதியில் தன்னுடைய நண்பர்களுடன் அதில் குளித்தபடியே சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வீடியோவை அவர் தன்னுடைய யூடியூபில் பகிர்ந்தார். இது குறித்து அறிந்த ஆலப்புழா போக்குவரத்து துறை அதிகாரிகள் யூடியூபர் சஞ்சு டெக்கி மீது வழக்கு பதிவு செய்தனர். அவரது லைசென்சை ரத்து செய்த அதிகாரிகள் காரையும் பறிமுதல் செய்தனர்.

The post ஆவேசம் பட பாணியில் காருக்குள் நீச்சல் குளம்; யூடியூபர் மீது வழக்கு: லைசென்ஸ் ரத்து appeared first on Dinakaran.

Tags : YouTuber ,Thiruvananthapuram ,Bahad Basil ,Tamil Nadu ,
× RELATED காரில் 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கு...