×

திருமணம் நடக்கவிருந்த நிலையில் போதையில் மட்டையானதால் மணமகனை உதறி தள்ளிய இளம்பெண்: தர்மபுரி அருகே பரபரப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே தொட்டபடக்காண்டஅள்ளி பகுதியை சேர்ந்த சின்னபையன்-சின்னபாப்பா தம்பதியின் மகன் சரவணன்(32). தொழிலாளி. இவருக்கும், திருவண்ணாமலை அடுத்த செங்கம் நேரு நகரை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் நேற்று காலை 7.30 மணியளவில் ராயக்கோட்டை வஜ்ஜிரப்பள்ளம் ஈஸ்வரன் கோயிலில் நடப்பதாக இருந்தது. இதனையொட்டி, மணப்பெண் வீட்டார் வேனில் புறப்பட்டு நேற்று காலை 6 மணியளவில் கோயிலை வந்தடைந்தனர். ஆனால், அங்கு மணமகன் வீட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. குழப்பமடைந்த மணப்பெண் வீட்டார், மணமகனின் செல்போனை தொடர்பு கொண்ட போது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், அவரது பெற்றோர் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது, யாரும் எடுக்கவில்லை.இதனால், மணமகன் வீட்டிற்கு சென்றனர். அங்கு மணமகன் தனது அறையில் போதையில் மட்டையாகி கிடந்ததை கண்டு திருமணம் நடக்கவுள்ள நேரத்தில், கொஞ்சமும் பொறுப்பின்றி குடிபோதையில் மயங்கி கிடந்த சரவணனை, மணப்பெண் வீட்டார் தாங்கள் வந்த வேனிலேயே தூக்கி போட்டுக் கொண்டு மாரண்டஅள்ளி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அவரை ஒப்படைத்து, நடந்த விபரத்தை கூறினர். அங்கு போலீசார் மேற்கொண்ட முயற்சியில், லேசாக போதை தெளிந்து எழுந்த சரவணன், நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.  ஆனால், அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்றும், திருமணத்தை நிறுத்தி விடும்படியும், மணப்பெண் தெரிவித்தார். அவரிடம் மணமகனின் உறவினர்கள் கெஞ்சிக்கேட்டும் அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை. இதுகுறித்து, இளம்பெண்ணின் தாய்மாமன் பாபு அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய போலீசார், திருமணத்திற்காக மணப்பெண் வீட்டார் செய்த செலவை, சரவணன் குடும்பத்தினர் திருப்பி தரவேண்டும் என கூறினர்….

The post திருமணம் நடக்கவிருந்த நிலையில் போதையில் மட்டையானதால் மணமகனை உதறி தள்ளிய இளம்பெண்: தர்மபுரி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Saravanan ,Chinnabaiyan-Chinnapappa ,Thottapatakandaalli ,Marandaalli, Dharmapuri district ,Tiruvannamalai ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு