×

கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி திமுக மனு..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி திமுக மனு அளித்துள்ளது. திமுக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளபோது விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறல் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. தியான நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி, மறைமுகமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட வாய்ப்பு என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி திமுக மனு..!! appeared first on Dinakaran.

Tags : Dimuka ,PM Modi ,Kanyakumari ,Modi ,District Election Officer ,Dimuka West District Attorney's Team ,Vivekananda ,
× RELATED மக்களுக்கான குரல் வலுவாக...