×

வேளிமலை குமாரகோயிலுக்கு போலீஸ், பொதுப்பணித்துறை காவடி

தக்கலை:  கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையன்று தக்கலையை அடுத்த வேளிமலை குமாரசுவாமி கோயிலுக்கு தக்கலை போலீஸ் ஸ்டேஷன், பொதுப்பணி நீர்வளத்துறை அலுவலகம் ஆகியவற்றில் இருந்து மலர் காவடிகள் செல்வது திருவிதாங்கூர் மன்னர் காலந்தொட்டு வழக்கமாக நடந்து வருகிறது. நாட்டு மக்கள் சண்டை சச்சரவுகள் இன்றி அமைதியாக வாழ வேண்டி போலீசாரும், நாட்டில் மக்கள் செழிப்புடன் இருந்தால் விவசாயம் பெருகும் என்ற கருத்தில் பொதுப்பணி நீர்வளத்துறையினரும் விரதம் மேற்கொண்டு காவடி எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இது மட்டுமன்றி தக்கலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில்  இருந்து விரதம் மேற்கொண்ட பக்தர்களும் காவடி எடுத்துச் சென்று தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவு செய்வது வழக்கம்.கொரோனா  காரணமாக யானை ஊர்வலம்  தடை செய்யப்பட்டது.  இதையடுத்து வேளிமலைக்கு காவடி பவனி நேற்று நடைபெற்றது. காவடி பவனியையொட்டி தக்கலை காவல் நிலையம், பொதுப்பணித் துறை அலுவலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நாதஸ்வரம் இசைக்கப்பட்டது.தக்கலை காவல் நிலையத்தில் இருந்து பால்குடம் ஏந்தியும், இரண்டு மலர் காவடிகளுடன் பவனி புறப்பட்டது. இந்நிகழ்வில் மாஜிஸ்திரேட் தீனதயாளன், டிஎஸ்பி கணேசன், இன்ஸ்பெக்டர் சுதேசன், சப் இன்ஸ்பெக்டர் அருளப்பன் உள்ளிட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து 3 மலர் காவடிகள் பால்குடம் ஏந்தி புறப்பட்டது. உதவி பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள், பாசனதாரர்கள் கலந்து கொண்டனர். அனைத்து காவடிகளும் கோயிலை வந்தடைந்தது.  இறுதியாக போலீஸ் காவடி வந்து சேர்ந்ததும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.  கோவிலில் நீர்வள துறையினர், காவல் துறை சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது….

The post வேளிமலை குமாரகோயிலுக்கு போலீஸ், பொதுப்பணித்துறை காவடி appeared first on Dinakaran.

Tags : Works ,Kavadi ,Velimalai Kumarakoil ,Thakkalai ,Karthikai ,Velimalai Kumaraswamy ,Temple ,Thakkalai Police Station ,Public Works Water Resources Department ,Velimalai Kumarakoil Police ,Public Works Department ,Dinakaran ,
× RELATED சிவகாசியில் வேலன் காவடி எடுத்து குழந்தைகள் நேர்த்திக்கடன்