×

பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருவதையொட்டி குமரி சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

கன்னியாகுமரி: பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருவதையொட்டி சுற்றுலா தலங்கள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையை ஒட்டி கடும் சோதனைக்குப் பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். கடும் கட்டுப்பாடுகள் காரணமாக திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டில் பாலம் நோக்கி சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். திரிவேணி சங்கமம், டவர் வியூ, காந்தி மண்டபம், கோவளம் கடற்கரை உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடின. பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக செல்ல முடியாமல் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

The post பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருவதையொட்டி குமரி சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kumari ,Modi ,Kanyakumari ,Dilparapu Falls ,Mathur Cradle Bridge ,
× RELATED கன்னியாகுமரி அருகே பேருந்து...