×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜோகோவிச், படோசா வெற்றி

பாரீஸ்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த முதல் சுற்று போட்டியில், நம்பர் 1 வீரரும், நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் 37 வயதான நோவக் ஜோகோவிச், 6-3,7-6,6-4 என்ற செட் கணக்கில், பிரான்சின் பியர்-ஹியூஸ் ஹெர்பர்ட்டை வீழ்த்தினார். நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூர் 6-3,6-4,1-6,6-2 என அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்ட்டை வென்றார். டென்மார்க்கின் ஹோல்கர் ரூன், 6-4,6-4,6-4 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் டான் எவன்சையும், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் , 6-4,7-5,6-3 என பிரான்சின் கிரிகோயர் பாரேரையும் வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இன்று அதிகாலை நடந்த போட்டியில், ஸ்பெயினின் 26 வயதான பவுலா படோசா, 4-6,7-5,.6-4 என 26வது ரேங்க் வீராங்கனையான இங்கிலாந்தின் கேட்டி போல்டரைவென்றார். கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவா, 6-1,6-2 என அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை வீழ்த்தினார். 19ம் நிலை வீராங்கனையான பெலாரசின் விக்டோரியா அசரென்கா, 6-1,6-0 என அர்ஜென்டினாவின் நதியா பொடோரோஸ்காவை எளிதாக தோற்கடித்தார். அமெரிக்காவின் மேடிசன்கீஸ் 6-3,6-2 என மெக்சிகோவின் ரெனாட்டா ஜராசுவாவையும், 2ம் நிலைவீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, 6-1,6-2 என ரஷ்யாவின் எரிகா ஆண்ட்ரீவாவையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தனர். இன்று 2வது சுற்று போட்டிகள் நடக்கிறது.

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜோகோவிச், படோசா வெற்றி appeared first on Dinakaran.

Tags : French Open Tennis ,Djokovic ,Padosa ,Paris ,Grand Slam ,France ,Serbia ,Dinakaran ,
× RELATED அல்கராஸ் மீண்டும் சாம்பியன்: பைனலில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்