×

எவரெஸ்ட், லோட்சே ஆகிய 2 மலைகளை ஏறி இந்தியர் சாதனை

காத்மாண்டு: சத்யதீப் குப்தா என்பவர் எவரெஸ்ட், லோட்சே ஆகிய 2 மலைகளை ஏறி சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் மலை ஏற்றம் என்பது பெரும்பாலும் இமயமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவின் மலை ஏற்றப் பயிற்சி பெற்ற சத்யதீப் குப்தா என்பவர் ஒரே நேரத்தில் எவரெஸ்ட் மலை சிகரத்தையும், லோட்சே மலை சிகரத்தையும் 11 மணி நேரம் 15 நிமிடங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார். இவர் 8,516 மீட்டர் உயரம் கொண்ட லோட்சே மலையையும், 8,849 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தையும் ஏறினார்.

இதுபோன்ற மலையேற்றத்தை ஏற்பாடு செய்யும் ‘முன்னோடி சாகசப் பயணம்’ அமைப்பு ெவளியிட்ட அறிவிப்பில், ‘சத்யதீப் மலை ஏறும் போது அவருடன் வழிகாட்டிகள் பாஸ்டெம்பா ஷெர்பா, நிமா உங்டி ஷெர்பா ஆகியோர் இருந்தனர். இவர் கடந்த 21ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தையும், 22ம் தேதி லோட்சே சிகரத்தையும் ஏறினார். இரண்டு மலைகளிலும் ஒன்றன் பின் ஒன்றாக ஏறிய முதல் இந்திய மலையேறுபவர் என்ற பெருமையை சத்யதீப் குப்தா பெற்றுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டது.

The post எவரெஸ்ட், லோட்சே ஆகிய 2 மலைகளை ஏறி இந்தியர் சாதனை appeared first on Dinakaran.

Tags : Everest ,Lhotse ,Kathmandu ,Satyadeep Gupta ,India ,Himalayas ,Western Ghats ,
× RELATED எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி மும்பை பள்ளி மாணவி சாதனை