×

பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி குமரி சுற்றுலா படகு சேவை நிறுத்தம்!!

கன்னியாகுமரி: பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 3 நாள் பயணமாக பிரதமர் மோடி குமரி வருகையை ஒட்டி சுற்றுலா பயணிகளிடம் காவல்துறை சோதனை நடத்தினர். சோதனையில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது . நீண்ட வரிசையில் காத்திருந்த 2 சுற்றுலா பயணிகள் குழுக்களிடையே பயங்கர தகராறு ஏற்பட்டதில் சுற்றுலா பயணிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. எனவே பாதுகாப்பு கருதி சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும், விவேகானந்தர் மண்டபம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி குமரி சுற்றுலா படகு சேவை நிறுத்தம்!! appeared first on Dinakaran.

Tags : Kumari ,Modi ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி- களியக்காவிளை...