×

தொடர் மழை காரணமாக அப்பர் பவானி அணை நீர்மட்டம் 130 அடியாக உயர்வு!!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் அப்பர் பவானி அணையின் நீர்மட்டம் 130 அடியாக உயர்ந்துள்ளது. அப்பர் பவானி அணையில் போதிய மழை பெய்யாததால் நீர் மட்டம் வெகுவாக குறைந்து கடந்த மாதம் 60 அடியாக இருந்தது. அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, முக்குருத்தி, போர்த்தி மந்து, பார்சன்ஸ் வேலி, பைக்காரா, குந்தா என 12 அணை உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெரிய அணையான அப்பர் பவானி அணையில் இருந்துதான் மற்ற அணைகளுக்கு தண்ணீர் செல்லும்.

 

The post தொடர் மழை காரணமாக அப்பர் பவானி அணை நீர்மட்டம் 130 அடியாக உயர்வு!! appeared first on Dinakaran.

Tags : Upper Bhavani Dam ,Nilagiri ,UPPER BHAWANI DAM ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் கனமழை பெய்து வருவதால்...