×

உத்தரப்பிரதேசத்தில் பாஜக நிர்வாகி பிரிஜ் பூஷண் மகனின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் பாஜக நிர்வாகி பிரிஜ் பூஷண் மகன் கரணின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பாஜக நிர்வாகியான பிரிஜ்பூஷண், இந்திய மல்யுத்த சங்க முன்னாள் தலைவரக பதவி வகித்தார். பதவிக்காலத்தின் போது மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரிஜ் பூஷண் மீடு குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து அவர் இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

பிரிஜ் பூஷண் மகன் கரண், பா.ஜ.க. சார்பில் கைசர்கஞ்ச் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். பிரிஜ் பூஷண் மகன் கரணின் பாதுகாப்பு வாகனம் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

The post உத்தரப்பிரதேசத்தில் பாஜக நிர்வாகி பிரிஜ் பூஷண் மகனின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,BJP ,Brij Bhushan ,Karan ,Konda, Uttar Pradesh ,executive ,Indian Wrestling Association ,
× RELATED வாக்குவாதம் செய்ததை தடுத்ததால் விமான...