×

நெல்லை-எழும்பூர் இடையே சிறப்பு வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே

சென்னை: நெல்லை-எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜூன் 6,13,20,27தேதிகளில் மாலை 6.45க்கு நெல்லையில் புறப்படும் ரயில் மறுநாள் 8.30க்கு எழும்பூர் செல்லும். ஜூன் 7,14,21,28 தேதிகளில் எழும்பூரில் மதியம் 3க்கு புறப்படும் ரயில் மறுநாள் 7.10க்கு நெல்லையை அடையும். ஜூன் 1 – 30 வரை மோளகவல்லி-நேமக்கல்லு, ரேணிகுண்டா – ஏர்பேடு பிரிவுகளுக்கு இடையே ரயில் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. பொறியியல் பணிகள் காரணமாக ரயில் பகுதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

The post நெல்லை-எழும்பூர் இடையே சிறப்பு வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Nellai- ,Rampur ,Southern Railway ,Chennai ,Nellai-Rampur ,Nella ,Ulampur ,Nellai ,Railway ,Dinakaran ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்