×

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து நலமுடன் இருக்கிறார் : துரை வைகோ

சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து நலமுடன் இருக்கிறார் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தலைவர் வைகோ அவர்களுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. தலைவர் நலமுடன் இருக்கிறார்..!..இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களுக்கு சற்றுமுன் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. தலைவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். தலைவரின் இடது தோளில் மூன்று இடத்தில் எலும்புகள் உடைந்திருந்தது. தற்போது அதை சரி செய்ய டைட்டானியம் பிளேட் வைத்திருக்கிறார்கள். நாற்பது நாட்கள் ஓய்வுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

தலைவர் அவர்களுக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஒரு வாரத்திற்கு பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.ஆகவே, கழகத் தோழர்களும் நலம் விரும்பிகளும் தலைவரை சந்திக்க வருவதை தவிர்த்து ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக மருத்துவமனையில் இருந்தபடி தனது உடல்நிலை குறித்து வைகோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் நன்றாக உள்ளேன். முழு ஆரோக்கியத்துடன் வருவேன். முன்பு போல இயங்க முடியுமா என யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம். எனக்காக கவலை கொண்டுள்ளவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து நலமுடன் இருக்கிறார் : துரை வைகோ appeared first on Dinakaran.

Tags : Secretary General ,Wiko ,Durai Wiko ,Chennai ,Durai Vigo ,Vigo ,Duri Wiko ,President ,Reverend General ,
× RELATED மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில...