×

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

சென்னை: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விருகம்பாக்கம் மகளிர் போலீசார் கார்த்திக் முனுசாமியை நேற்று கைது செய்தனர். சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி பாலியல் வழக்கில் சிக்கினார். கோயிலுக்கு சாமி கும்பிட வந்த தன்னை வீட்டில் காரில் அழைத்துச் சென்று விடுவதாகக் கூறி தன்னிடம் அர்ச்சகர் அத்துமீறியதாகவும், மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.

இவர் மீது, விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் , தலைமறைவான அவரை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இந்நிலையில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண்ணை மானபங்கம்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விருகம்பாக்கம் மகளிர் போலீசார் கார்த்திக் முனுசாமியை நேற்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

The post பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Tags : Kaligambala temple ,Kartik Munusamy ,Chennai ,Arshagar Karthik Munusamy ,Virugambakkam Women Police ,Karthik Munusamy ,
× RELATED காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர்...