அவிநாசி, மே 29: அவிநாசி அருகே பெருமாநல்லூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ராஜஸ்தானை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவிநாசி அருகே உள்ள பெருமாநல்லூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், தலைமை காவலர் கார்த்திகேயன் மற்றும் முதல்நிலைக்காவலர்கள் சதீஷ் மயில்சாமி, பாலகுமாரன் உள்ளிட்ட போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இதனைத்தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தினேஷ்குமார் (21), ஏய்ட்டான் மகன் தினேஷ் (23) என்பவர்களை பெருமாநல்லூரிலும், கேவரொம் (26) என்பவரை திருப்பூர் ரயில் நிலையத்திலும், மாதாராம் (26) என்பரையும் அவரது தம்பி தூதாராம் (24) என்பவரை அவிநாசியிலும், கோபாராம் (35) மற்றும் ஓபாராம் (30) என்பவரை பெருமாநல்லூர் அருகே முடியங்கிணறு பகுதியிலும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 239 மூட்டைகளில் 1658 கிலோ எடையுள்ள குட்கா புகையிலை பொருட்களையும் போலீசார் நேற்று இரவு பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களை போலீசார் அவிநாசி ஜேஎம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
The post 658 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் வைத்திருந்த ராஜஸ்தானை சேர்ந்த 7 பேர் கைது appeared first on Dinakaran.