×

பவானியில் புதிதாக அமைக்கப்பட்ட புறவழி சாலையின் இரு புறங்களிலும் 500 மரக்கன்றுகள் நட நடவடிக்கை

 

பவானி, மே 29: பவானியை சுற்றி செல்லும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலையின் இரு புறங்களிலும் முதல் கட்டமாக 500 மரக்கன்றுகள் நட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.பவானி – மேட்டூர் சாலையில் குருப்ப நாயக்கன்பாளையம் அருகே பிரிந்து வலது புறமாக செல்லும் புறவழி சாலை, பவானி – அந்தியூர் சாலை, பவானி – அத்தாணி சாலை, பவானி – கவுந்தப்பாடி சாலையை கடந்து சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது. சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்படும் சாலை பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.

வயல் வெளிகள் வழியாக, நிலம் கையகப்படுத்தப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள இச்சாலையின் இரு புறங்களிலும் நிழல் தரும் மரங்கள் நடுவதற்கு நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக 500 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டு விரைவில் மரங்கள் நடும் பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் மேலும் மரக்கன்றுகள் நட விரும்பும் தன்னார்வலர்களும் ஆர்வமுடன் மரம் வளர்க்கும் பணியில் பங்கேற்கலாம் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பவானியில் புதிதாக அமைக்கப்பட்ட புறவழி சாலையின் இரு புறங்களிலும் 500 மரக்கன்றுகள் நட நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Bhawani ,Bhavani ,Highways Department ,Bhavani - Mettur road ,Kuruppa Nayakkanpalayam ,Dinakaran ,
× RELATED பறிமுதல் குட்கா பதுக்கி பேரம் 2 போலீஸ்காரர் சஸ்பெண்ட்