×

ராமநாதபுரத்தில் செல்போன் கடையில் திருட்டு

ராமநாதபுரம், மே 29: ராமநாதபுரத்தில் செல்போன் கடையில் விசாரிப்பது போன்று செல்போனை திருடிய நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் அரண்மனை பஜாரில் உள்ள ஒரு செல்ேபான் கடையில் ஒருவர் செல் சர்வீஸ் கொடுப்பது போல் சென்று ஊழியரிடம் விசாரித்துள்ளார். அப்போது ஊழியர் திரும்பி வேலை செய்து கொண்டிருந்த போது அந்த நபர் கைய நீட்டி ரூ.15,000 மதிப்பிலான செல்போனை எடுத்துச் சென்றார்.

சிறிது நேரத்தில் திரும்பிய ஊழியர் செல்போன் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து கடையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் சர்வீஸ் குறித்து விசாரித்த அந்த நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பெயர், முகவரி தெரியாத அந்த நபர் குறித்து விவரம் அறிந்தால் தகவல் கொடுக்கும்படி செல்போன் கடை ஊழியர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post ராமநாதபுரத்தில் செல்போன் கடையில் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Palace Bazaar ,
× RELATED போக்சோ வழக்கில் ஆஜராகாத தாம்பரம்...