×

தீ விபத்தில் லாரி எரிந்து நாசம்

 

ஆவடி, மே. 29: வைக்கோல் ஏற்றி சென்றபோது மின் வயர் உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில் லாரி எரிந்து நாசமானது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (40). இவர், பட்டாபிராம், தண்டரை, விக்னேஷ் நகரில் நேற்று மதியம் லாரியில், நெல் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல் கட்டுகளை ஏற்றிக் கொண்டு தண்டரை நோக்கிச் சென்றார்.

அப்போது, மேலே சென்ற மின்சார வயர் மீது லாரி உரசியது. இதனால் வைக்கோல் தீப்பற்றி எரிந்தது. தீயைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சரவணன், கீழே இறங்கி தீயை அணைக்க முயற்சித்தார். அதற்குள் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் சிறிது நேரத்தில் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கண் எரிச்சலும் மூச்சு திணறலும் ஏற்பட்டது.

அப்பகுதி மக்கள் உடனடியாக ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி தீயணைப்பு துறையினர், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லாரி முழுவதும் தீயில் கருகி நாசமானது. சம்பவ இடத்திற்கு வந்த பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தீ விபத்தில் லாரி எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Avadi ,Saravanan ,Akaram, Bochampalli, Krishnagiri district ,Battabram, Thandarai ,Vignesh Nagar ,
× RELATED பைக்குக்கு மாத தவணை செலுத்த பெற்றோர்...