×

திருத்துறைப்பூண்டியில் தோட்டக்கலை தகவல் மையம் அமைப்பு

 

திருத்துறைப்பூண்டி, மே 29: திருத்துறைப்பூண்டியில் தோட்டக்கலை தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளதை உதவி இயக்குனர் இளவரசன் ஆய்வு செய்தனர். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை திருவாரூர் மாவட்ட துணை இயக்குனர் நீதிமாணிக்கம் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு வட்டாரத்திலும் தோட்டக்கலை தகவல் மையம் அமைத்திட அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து திருத்துறைப்பூண்டியில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தோட்டக்கலை துறையின் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்கள் பற்றிய விரிவான விளம்பர பதாகை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பர பதாகையில் தோட்டக்கலைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டமான மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், பனை மேம்பாட்டு இயக்கம், நுண்ணுயிர் பாசன திட்டம், துணைநிலை நீர் மேலாண்மை திட்டம் ஆகிய திட்டங்களின் விரிவான மானிய விபரங்கள் அடங்கிய விள ம்பர பதாகைகளை திருத்துறைப்பூண்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் ஆய்வு மேற்கொண்டார். திருத்துறைப்பூண்டி வட்டார தோட்டக்கலை அலுவலர் சூரியா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அறிவழகன், ஹரிஹரன் மற்றும் கார்த்திகேஷன் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post திருத்துறைப்பூண்டியில் தோட்டக்கலை தகவல் மையம் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Horticulture Information Center ,Thiruthurapundi ,Thiruthurapoondi ,Assistant ,Ilarasan ,Horticulture and ,Hill Crops Department ,Tiruvarur District ,Deputy Director ,Neetimanikam ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் காவல்துறை பெட்டிஷன் மேளா