×

வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு

 

திருவாரூர், மே 29: நன்னிலம் வட்டம், வண்டாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள திருவாரூர் மனநல காப்பகத்தை மாவட்ட கலெக்டர் சாரு, நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார். பின்னர் விரைந்து சிகிச்சை அளித்து குடும்பத்தினருடன் சேர்க்கவும் அவர் உத்தரவிட்டார். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், வண்டாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள திருவாரூர் மனநல காப்பகத்திற்கு நேற்று திடீரென வந்த மாவட்ட கலெக்டர் சாரு, காப்பகத்தை ஆய்வு செய்தார்.

பின்னர் மூன்று வேளையும் மனநலகாப்பகத்தில் வழங்கப்படும் உணவுகளை மாதிரி எடுத்து வைக்க வேண்டும் எனவும், மனநலகாப்பகத்தினை சுகாதாரத்துடனும், உள்ளுரையாளர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து விரைந்து குடும்பத்தினருடன் சேர்க்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் சாரு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் புவனா, அரசு மனநலத்திட்ட மருத்துவர் சக்திபிரகாஷ், நன்னிலம் வட்டாட்சியர் குருமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

 

The post வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Vandampalayam ,Tiruvarur ,District Collector ,Charu ,Nannilam circle ,Thiruvarur district ,Dinakaran ,
× RELATED திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!!