×

புன்னை வன நாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு

 

வேலாயுதம் பாளையம், மே 29: கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னை வனநாதர் உடனுறை புன்னைவனாயகி கோயிலில் அக்னி நட்சத்திரம் தோஷ நிவர்த்தியை முன்னிட்டு புன்னைவன நாதருக்கு பால், தயிர், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் புன்னைவன நாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புன்னைவனநாதர் ,புன்னைவன நாயகி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

The post புன்னை வன நாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Punnai Vana Nathar Temple ,Velayutham ,Palayam ,Punnai Vananathar ,Udanurai ,Punnaivanayaki Temple ,Punnam ,Punnam Chatram ,Karur ,Punnaivana Nathar ,
× RELATED திருப்பணிக்குப் பொருள் வேண்டி வேலாயுதத்தில் விளம்பரம் செய்த வேலன்!