×

அரசு அதிகாரிகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் கைது

 

கோவில்பட்டி, மே 29: கோவில்பட்டியில் அரசு அதிகாரிகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவரை போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்தவர் சேகர் (55). இவர், கோவில்பட்டி ஆர்டிஓ ஜேன் கிறிஸ்டிபாய், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பால கிருஷ்ணன், கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய எஸ்ஐ சிவராஜ் ஆகியோர் குறித்து சமூக வலைதளங்களிலும், சுவரொட்டிகள் மூலமும் அவதூறு பரப்பினார்.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து சேகரை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் சென்னையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்துசென்ற தனிப்படையினர் சேகரை கைது செய்து கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

The post அரசு அதிகாரிகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Shekhar ,Sanmugasikamani ,Jane Christiphai ,Government Hospital ,Superintendent ,Bala ,
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் காக்கி...