×

இருதரப்பிலும் 4 பேர் கைது

 

சேலம், மே 29: சேலத்தை அடுத்துள்ள காரிப்பட்டி வெள்ளியம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (42), விவசாயியான இவரது விவசாய தோட்டத்தில் வேலை பார்க்கும் நபரின் மகளிடம் அப்பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தொந்தரவு செய்து வந்துள்ளார். அதனை தட்டிக்கேட்க சென்ற கார்த்திக்கை மணிகண்டன், அவரது நண்பர்கள் நேரு, தாமரைச்செல்வன் ஆகியோர் சரமாரி தாக்கி, கத்தியால் குத்தினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கார்த்திக்கை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.

அதில், கார்த்திக்கின் தாய் சுப்புலட்சுமி கொடுத்த புகாரின்பேரில், கத்திக்குத்தில் ஈடுபட்ட மணிகண்டன், நேரு, தாமரைச்செல்வன் ஆகிய 3 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நேரு (36), தாமரைச்செல்வன் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், தன்னை தாக்கியதாக மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், கார்த்திக், அவரது உறவினர்கள் வேல்முருகன் (60), அவரது மகன் கார்த்தி (23) ஆகிய 3 பேர் மீது தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் வேல்முருகன், கார்த்தி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், கைதான 4 பேரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.

 

The post இருதரப்பிலும் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Karthik ,Garipatti Velliampatti ,Manikandan ,
× RELATED ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த அதிமுக மாஜி மேயர் உறவினர் தற்கொலை