×

மின் கம்பி அறுந்து 7 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

ஜோலார்பேட்டை: பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு 8.18 மணிக்கு கன்னியாகுமரி வரை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே நள்ளிரவு 12 மணியளவில் வந்தபோது ரயில் இன்ஜினுக்கு செல்லும் உயரழுத்த மின் சப்ளை திடீரென தடைபட்டது.

இன்ஜின் டிரைவர்கள் இறங்கி வந்து பார்த்தபோது உயர் மின்னழுத்த கம்பி தண்டவாளத்தில் அறுந்து கிடந்தது தெரியவந்தது.அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்து மின்கம்பியை சுமார் ஒரு மணி நேரம் போராடி சரி செய்தனர். இதையடுத்து நள்ளிரவு 12.54 மணியளவில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் அங்கிருந்து புறப்பட்டது. இதன் காரணமாக 7 ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டு தாமதமாக புறப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

 

The post மின் கம்பி அறுந்து 7 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari Express ,Kanyakumari ,Bengaluru ,Tirupathur railway station ,
× RELATED குமரி எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதம்