×

தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை கண்டித்ததால் பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை: 17 வயது சிறுவன் வெறிச்செயல்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நிரவி கிராமத்தை சேர்ந்ததம்பதிக்கு 13 வயதில் ஒரு மகனும், 9 மற்றும் 7 வயதுகளில் இரு மகள்களும் இருந்தனர். 3 பேரும் அருகிலுள்ள அரசு பள்ளியில் படித்துள்ளனர். நேற்றுமுன்தினம் பகலில் விளையாட சென்ற 13 வயது மகன் இரவில் எதிர் வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான். அவனது கழுத்து பகுதி 7 இடங்களில் ரத்தம் வெளியேறும் அளவுக்கு கொடூரமாக அறுக்கப்பட்டிருந்தது.

அவனை 17 வயதுக்குட்பட்ட சிறுவன், கொலை செய்துவிட்டு தாயுடன் வீட்டை பூட்டி விட்டு தப்பியது தெரியவந்தது. இதை தொடர்ந்து மயிலாடுதுறையை அடுத்த வடகரையில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சிறுவனை பிடித்து காரைக்கால் கொண்டு வந்து விசாரித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொலையாளியான சிறுவனுக்கு பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டுவதற்காக 13வயது சிறுவனின் தங்கையை தனது வீட்டுக்கு அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளான்.

தப்பி ஓடி வந்த சிறுமி தனது சகோதரனிடம் தெரிவித்துள்ளாள். இதையடுத்து 13வயது சிறுவன் சென்று கண்டித்தபோது, அவனது கைகளை பின்புறமாக துணியால் கட்டி வாயில் துணியை திணித்து, கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளான் என்றனர். இதையடுத்து 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

The post தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை கண்டித்ததால் பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை: 17 வயது சிறுவன் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Niravi ,
× RELATED காரைக்காலில் வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை!!