×

கடலில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு

சென்னை: எண்ணூர் தாழங்குப்பம் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (58), மீனவர். இவர், நேற்று அதிகாலை சக மீனவர்கள் 4 பேருடன், பைபர் படகில் முகத்துவார ஆற்றங்கரையிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டார். கடலில் சிறிது தூரம் சென்றதும் அலையின் வேகம் அதிகமாக இருந்ததால், இவர்கள் சென்ற படகு கவிழ்ந்தது.

இதில் கடலில் தத்தளித்த மீனவர்கள் சுதாரித்துக் கொண்டு நீந்தி கரை வந்து சேர்ந்தனர். ஆனால் ஹரிகிருஷ்ணன் மட்டும் வரவில்லை. இந்நிலையில் ஹரி கிருஷ்ணனின் உடல் கொசஸ்தலை ஆற்று ஓரமுள்ள கருங்கற்களில் கரை ஒதுங்கி இருந்தது.தகவலறிந்த எண்ணூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

 

The post கடலில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Haririkrishnan ,Tolur Thalanupam Apartment ,Mukatuwara River ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...