×

ஒன்றிய உணவுத்துறையில் பொறுப்பு தருவதாக சேலம் டாக்டரிடம் ரூ.2.48 கோடி மோசடி: சேலம் கோர்ட்டில் ஒருவர் சரண்; 2 பேருக்கு வலை

சேலம்: ஒன்றிய உணவுத்துறையில் பொறுப்பு வாங்கி தருவதாக கூறி பிரபல டாக்டரிடம் ரூ.2.48 கோடி மோசடி செய்த வழக்கில் ஒருவர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார். சேலம் அஸ்தம்பட்டியில் பிரபல டாக்டர் ஒருவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 2018ல் 4 பேர் வந்து ஒன்றிய அரசின் உணவுத்துறையில் உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மேலும் ஒன்றிய அமைச்சர்கள், அதிகாரிகளை பார்க்கலாம் என டெல்லிக்கு அழைத்துச் சென்றதுடன், ஒன்றிய அரசின் கொடி, காரில் பொருத்தும் சுழல்விளக்கு போன்றவற்றை கொடுத்துள்ளனர். உறுப்பினர் பதவிக்கான உத்தரவு விரைவில் வந்துவிடும் என கூறிய அவர்கள் இதற்காக ரூ.1 கோடி செலவாகும் என கூறியுள்ளனர். அடிக்கடி வந்து சந்தித்து பேசி ெகாஞ்சம் கொஞ்சமாக ரூ.2 கோடியே 48 லட்சம் வரை அந்த டாக்டரிடம் இருந்து பெற்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் கூறியபடி உறுப்பினர் பதவிக்கான உத்தரவு ஏதும் வரவில்லை. நாளடைவில் அவர்கள் ஏமாற்றுவதை தெரிந்த ெகாண்ட டாக்டர், அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ஜோதிகுமார், சேலம் அழகாபுரம் ஏடிசி நகரை சேர்ந்த அசோகன்(65), சேலம் ஆத்தூரைச்சேர்ந்த வேளாண்மைத்துறை அதிகாரி மாசிலாமணி, மற்றும் அசோக்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிந்த போலீசார் அவர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் இன்னொரு மோசடி வழக்கில் கைதாகி சென்னை சிறையில் இருந்த ஜோதிக்குமாரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். மீதமுள்ள 3 பேரை தேடி வருகின்றனர். இவர்களில் சேலம் ஏடிசி நகரை சேர்ந்த அசோகன் சேலம் 3வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் சரண் அடைந்தார். மாஜிஸ்திரேட் உத்தரவின்படி அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

The post ஒன்றிய உணவுத்துறையில் பொறுப்பு தருவதாக சேலம் டாக்டரிடம் ரூ.2.48 கோடி மோசடி: சேலம் கோர்ட்டில் ஒருவர் சரண்; 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Salem ,Union Food Department ,Salem Court ,Salem Astampatti ,Saran ,Court ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் உள்ள...