×

அதிக டிடிஎஸ் பிடித்தம் தவிர்க்க மே 31க்குள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்க வேண்டும்: வருமான வரித்துறை தகவல்

புதுடெல்லி: வருமான வரி விதிகளின்படி, பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படவில்லை எனில் நிர்ணயிக்கப்பட்ட டிடிஎஸ் பிடித்தத்தை விட 2 மடங்கு அதிக தொகை பிடித்தம் செய்யப்படும். எனவே மே 31ம் தேதிக்குள் பான், ஆதார் இணைத்து விட்டால், டிடிஎஸ் பிடித்தத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என வருமான வரித்துறை கடந்த மாதம் அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறையின் டிவிட்டர் பதிவில் நேற்று, ‘‘வரி செலுத்துவோர் மே 31ம் தேதிக்குள் பான், ஆதாரை இணைக்க வேண்டும்.

அதிக டிடிஎஸ் பிடித்தத்தை தவிர்க்க வேண்டுமெனில், கடைசி தேதிக்குள் பான், ஆதாரை இணைத்திடுங்கள்’’ என கூறி உள்ளது. மற்றொரு பதிவில், ‘‘வங்கி, பாரக்ஸ் டீலர்கள், தபால் அலுவலகங்கள், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் எஸ்எப்டி (குறிப்பிடப்பட்ட பரிவர்த்தனை அறிக்கை) ரிட்டனை மே 31க்குள் தாக்கல் செய்து அபராதத்தை தவிர்க்க வேண்டும்’’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

The post அதிக டிடிஎஸ் பிடித்தம் தவிர்க்க மே 31க்குள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்க வேண்டும்: வருமான வரித்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Aadhaar ,NEW DELHI ,Income Tax Department ,Dinakaran ,
× RELATED நேரடி வரிவசூல் ₹4.62 லட்சம் கோடி: வருமான வரித்துறை தகவல்