×

கடவுளின் அவதாரம் என கூறும் மோடி டின் பிரதமராக இருக்க மனரீதியாக தகுதியுடையவரா: செல்வப்பெருந்தகை கேள்வி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ர்தல் பிரசாரத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் நரேந்திர மோடி தன்னை கடவுளின் அவதாரம் என்றும், மறு பிறவி என்றும் பிதற்ற ஆரம்பித்து விட்டார். ‘தாய் தன்னை பெற்றெடுக்கவில்லை என்று கூறும் ஒருவர் உயிரியல் வழிமுறைப்படி தான் பிறக்கவில்லை என்று உறுதியாக நம்பும் ஒருவர், இந்திய நாட்டின் பிரதமராக இருப்பதற்கு மனரீதியாக தகுதியுடைவர் தானா?” என்கிற கேள்வி நாட்டு மக்களிடையே எழுந்திருக்கிறது.

எனவே, மக்களிடையே நிலவிய மத நல்லிணக்கத்தை கடந்த 10 ஆண்டுகளாக சீர்குலைத்து வெறுப்பு அரசியலை வளர்த்து அதன்மூலம் பகைமையை உருவாக்கி தேர்தலில் வெற்றி பெற்றது 2019 தேர்தலோடு முடிந்து போன கதையாகும். அந்த தேர்தலில் மக்களை மதரீதியாக ஏமாற்றியதைப் போல 2024ல் ஏமாற்ற முடியாது. மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post கடவுளின் அவதாரம் என கூறும் மோடி டின் பிரதமராக இருக்க மனரீதியாக தகுதியுடையவரா: செல்வப்பெருந்தகை கேள்வி appeared first on Dinakaran.

Tags : Modi ,God ,Prime ,Chennai ,Tamil Nadu Congress ,president ,Selvaperunthagai ,Narendra Modi ,
× RELATED பிரதமர் மோடி ஜூலையில் ரஷ்யா பயணம்?