×

ஒடிசா பிரசாரத்தில் 9 சேம் சைடு கோல் போட்டு பாஜ தனக்கு தானே சூனியம்: வி.கே.பாண்டியன் அதிரடி

புவனேஸ்வர்: ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடந்து வருகிறது. அங்கு ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவருமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் கூறியதாவது: ஒடிசாவில் தேர்தல் பிரசாரத்தில் பாஜ 9 சேம் சைடு கோல் போட்டு தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டுள்ளது. இதனால், 6வது முறையாக நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம் ஆட்சி அமைவது தவிர்க்க முடியாததாகி உள்ளது. நடந்து முடிந்த 3 கட்ட தேர்தலிலேயே நாங்கள் ஆட்சி அமைக்க பெரும்பான்மையை பெற்றுவிட்டோம். இறுதிகட்ட வாக்குப்பதிவு பிஜூ ஜனதா தளத்தின் கோட்டையாக கருதப்படும் பகுதிகளில் நடக்க உள்ளது.

இங்கு பாஜ போட்ட முதல் சேம் சைடு கோல் அல்லது தவறு என்னவென்றால், பூரி ஜெகன்நாதரை அரசியலுக்குள் இழுத்தது மற்றும் நவீன் பட்நாயக் குறித்து தவறாக பேசியது. மரியாதைக்குரிய தலைவரான பட்நாயக்கை தவறாக பேசுவதை ஒடிசா மக்கள் ஒருபோதும் ரசிக்க மாட்டார்கள். இதே போல, 70 லட்சம் பயன் பெறும் மிஷன் சக்தி திட்டத்தை ரத்து செய்வோம் என்றார்கள். மாநிலத்தில் 90 சதவீத மக்கள் பயன் பெறும் பிஜூ ஸ்வாஸ்த்ய கல்யாண் யோஜனாவை நிறுத்திவிட்டு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டு வருவோம் என பாஜ கூறியது அவர்களுக்கே எதிரானது.

சுபத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் ஒடிசாவில் ஒவ்வொரு பெண்களுக்கும் ரூ.50 ஆயிரம் வழங்குவதாக பாஜ கூறியிருக்கிறது. அப்படி பார்த்தால், ரூ.1 லட்சம் கோடி செலவழிக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே, ஒவ்வொருக்கும் ரூ.15 லட்சம் தருவதாக கூறி பாஜ ஏமாற்றியதைப் போல, இதுவும் வெறும் வார்த்தை ஜாலம்தான் என்பதை ஒடிசா பெண்கள் புரிந்து கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post ஒடிசா பிரசாரத்தில் 9 சேம் சைடு கோல் போட்டு பாஜ தனக்கு தானே சூனியம்: வி.கே.பாண்டியன் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Odisha ,Baja ,VK Pandian ,Bhubaneswar ,Lok Sabha elections ,IAS ,Biju ,Janata ,Dal ,Chief Minister ,Naveen Patnaik ,BJP ,Dinakaran ,
× RELATED ஒடிசா பேரவை தேர்தலில் பிஜேடி கட்சி...